வரவு செலவுத் திட்டம் தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதிக்கு கடிதம்!

Sunday, November 27th, 2016

அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள யோசனைகள் சம்பந்தமாக மீள் அவதானம் செலுத்தப்பட வேண்டும் என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த முறை வரவு செலவுத் திட்டத்தின் உடாக அரச பணியாளர்கள், தொழில் துறையினர் மற்றும் நாட்டுக்கு பாரிய பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதியின் நேரடி மற்றும் விரைவான தலையீட்டை எதிர்பார்ப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. ஐந்து பிரதான தலைப்புக்களின் கீழ் எழுதி ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

gmoa-720x480

Related posts: