வரவு – செலவுத்திட்டம் குறித்த கண்காணிக்கக் குழு நியமனம்!

Thursday, November 17th, 2016

வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகள் உரிய முறையில் நடைபெறுகின்றதா என்பதைக் கண்காணிக்கும் வகையில் குழு ஒன்று நியமிக்கப்படவுள்ளது.

இலங்கை பட்டயக் கணக்காளர் மன்றத்தில் நேற்று முன்தினம்  நடைபெற்ற கலந்துரையாடலில் உரையாற்றும் போது நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளதாவது,

வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகள் ஏராளமாக முன்வைக்கப்படுகின்றது. ஆனால் அவை உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. இதனைக் கருத்திற்கொண்டு, இம்முறை முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவுத்திட்டத்தின் முன்மொழிவுகள் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றதா? என்பதை அவதானிப்பதற்கு கண்காணிப்புக் குழு ஒன்று நியமிக்கப்படவுள்ளது. இக்குழுவில் பத்து முதல் பன்னிரண்டு வரையானோர் இடம் பெற்றிருப்பார்கள். இவர்கள் வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகள் மற்றும் அமைச்சுகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி என்பன உரிய முறையில் செலவிடப்படுகின்றதா? என்பதைக் கண்காணித்து அமைச்சரவைக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தின் போது இது தொடர்பான கலந்துரையாடல்கள் நடைபெறும் என்றும் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே எதிர்வரும் 2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நாளை மறுதினம் 18ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 thumb_budget-logo

Related posts:

இன்று நாடாளுமன்றம் கலைக்கப்படக்கூடும்? : ஏப்ரல் இறுதியில் தேர்தல் நடத்தமுடியும் - மஹிந்த தேசப்பிரிய!
சமூக இடைவெளியை பேணுவதில் சிரமம்: ஒரு நாள் சேவை தற்காலிகமாக நிறுத்தம் – ஆள்ப்பதிவுத் திணைக்களம் அறிவ...
அனைத்து மாகாண எல்லைகளிலும் தீவிர கண்காணிப்பை மேற்கொள்ளுங்கள் - பாதுகாப்பு தரப்புக்குப் ஜனாதிபதி பண...