வரவுசெலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதம் இன்று!

Wednesday, March 13th, 2019

இவ் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதம் இன்று(13) ஆரம்பமாகவுள்ளது.

இந்தக் குழுநிலை விவாதம் இன்றுமுதல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி வரை 19 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

அன்றைய தினம் மாலை, வரவுசெலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.

இன்று இடம்பெறவுள்ள குழுநிலை விவாதத்தில் ஜனாதிபதி, பிரதமர் அலுவலகங்கள், உயர்நீதிமன்ற நீதிபதிகள், அமைச்சு அலுவலகங்கள், அரச சேவை ஆணைக்குழு உள்ளிட்ட 25 விடயங்கள் தொடர்பில் விவாதங்கள் நடைபெறவுள்ளன.

Related posts: