வரலாற்று சாதனை படைத்த யாழ். இளைஞர்கள்!

Saturday, June 23rd, 2018

19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட்டில் இந்திய அணியினருக்கு எதிரான போட்டியில் இலங்கை அணியில் யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த தொடருக்கான தெரிவுகள் கொழும்பு, ஆர். பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற நிலையில், குறித்த இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
19 வயதுக்கு உட்பட்ட இலங்கை அணியில் யாழ்.மத்திய கல்லூரி வீரர்களான மதுஷன் மற்றும் விஜாஸ்காந் ஆகியோரே இடம்பிடித்து வரலாறு படைத்துள்ளார்கள்.
வடமாகாண அணி சார்பில் பிரகாசித்ததால் இரண்டு வீரர்களுக்கும் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதனிடையே இலங்கை அணியில் தமிழ் இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டமைக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

 

Related posts: