வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தனின் திருவிழா ஆரம்பம்!

Thursday, August 16th, 2018

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா இன்று (16) முற்பகல்-10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

சிவாச்சாரியார்களின் மந்திரங்கள் ஓத, அடியவர்களின் அரோகராக் கோஷம் முழங்க கொடியேற்ற உற்சவம் நடைபெற்றது.

நல்லூரான் கொடியேற்ற உற்சவத்தில் யாழ். மாவட்டத்திலிருந்து மாத்திரமன்றி வெளிமாவட்டங்களிலிருந்தும், புலம்பெயர் தேசங்களிலிருந்தும் வருகை தந்த பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் பக்திபூர்வமாகக் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: