வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா நாளை ஆரம்பம்!

Thursday, July 27th, 2017
 
 
வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் ஏ விளம்பி வருட மஹோற்சவப் பெருவிழா நாளை வெள்ளிக்கிழமை(28) முற்பகல்- 10 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. தொடர்ந்தும் 25 தினங்கள் காலை மாலை உற்சவங்களாக இவ்வாலயப் பெருவிழா நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
இவ்வாலயப் பெருந்திருவிழாவில் பத்தாம் திருவிழாவான அடுத்த மாதம்- 06 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை- 05 மணிக்கு மஞ்சத் திருவிழாவும், 12 ஆம் திகதி திங்கட்கிழமை இரவு- 07 மணிக்கு அருணகிரிநாதர் உற்சவமும், 15 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை-07 மணிக்குச் சூர்யோற்சவமும், அதேதினம் மாலை-05 மணிக்கு கார்த்திகை உற்சவமும், 16 ஆம் திகதி புதன்கிழமை காலை- 07 மணிக்குச் சந்தான கோபாலர் உற்சவமும், அதே தினம் மாலை- 05 மணிக்கு கைலாசவாகன உற்சவமும், 17 ஆம் திகதி வியாழக்கிழமை காலை-07 மணிக்கு கஜவல்லி மஹாவல்லி உற்சவமும், அதேதினம் மாலை- 05 மணிக்கு வேல்விமான(தங்கரதம்) உற்சவமும், 18 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை- 07 மணிக்குத் தண்டாயுதபாணி உற்சவமும்,  அதேதினம் மாலை-05 மணிக்கு ஒருமுகத் திருவிழாவும், 23 ஆம் திருவிழாவான 19 ஆம் திகதி சனிக்கிழமை மாலை-05 மணிக்குச் சப்பறத் திருவிழாவும், 20 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை- 07 மணிக்குத் தேர்த் திருவிழாவும், மறுநாள்- 21 ஆம் திகதி காலை-07 மணிக்குத் தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறவுள்ளன.

Related posts: