வரலாற்றின் சாட்சியமான பாரதியார் சிலையை மாற்றுவது ஆரோக்கியமானதல்ல – இரா செல்வவடிவேல் – அகற்றப்படாது என முதல்வர் தெரிவிப்பு!

Tuesday, December 28th, 2021

யாழ்ப்பாணத்தின் எப்பாகத்திலும் எத்தனை பாரதியார் சிலையை வேண்டுமானாலும் நிறுவுவதற்கு நாம் முழுமையான ஆதரவை வழங்கத் தயாராக இருப்பதாக சுட்டிக்காட்டிய ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாநகர சபை உறுப்பினர் இரா.செல்வவடிவேல் யாழ்ப்பாணத் தமிழரது வரலாற்றின் சாட்சியமாக இருக்கும் குறித்த பாரதியார் சிலையை அந்த இடத்திலிருந்து அகற்றுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அதனை புனரமைப்பு செய்து புதுப் பொலிவுடன் நிறுவுவதே சிறந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் குறித்த பாரதியார் சிலையை அகற்ற இடமளிக்கப்படாது என உறுதியளித்த முதல்வர் மணிவண்ணன் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பாரதியார் சிலையையும் விவேகானந்தர் சிலையையும் ஓட்டுமடம் கோம்பையன் ஆலடி சந்தியில் உள்ள சுற்றுவட்டத்தில் நிறுவுவதற்கு ஏற்பாடு செய்வதாகவும் தெரிவித்துள்ளார்

Related posts: