வரத்து நீர் விகிதம் அதிகரிப்பு – இரணைமடு குளத்தின் திறக்கப்பட்டுள்ள கதவுகளின் அளவு அதிகரிக்கப்படும் – தாழ்நிலப் பகுதிக்குள் வாழும் மக்களுக்கு அச்சரிக்கை விடுத்துள்ளது அனர்த்த முகாமைத்துவப் பிரிவு!

Thursday, January 14th, 2021

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 37 அடி 05 அங்குலத்தை தாண்டியுள்ள நிலையில் அனைத்து வான்கதவுகளும் திறந்துவிடப்பட்டுள்ளதால் அதிகளவு நீர் வெளியேறி வருகிறது.

இதனால் தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன முரசுமோட்டை ஐயன் கோயிலடி கிராமத்தில் வெள்ள நீர் புகுந்ததால் ஐந்து குடும்பங்கள் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ளன என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை இந்தப் பிரதேசத்தில் மேலும் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்குவதால் தமது கால்நடைகளையும் உடமைகளையும் கொண்டு மக்கள் வெளியேறி வருகின்றனர்.

வரத்து நீர் விகிதம் அதிகரிக்கும் காரணமாக, இரணைமடு குளத்தின் திறக்கப்பட்டுள்ள கதவுகளின் அளவு அதிகரிக்கப்படும் வாய்ப்புள்ளது. எனவே முரசுமோட்டை, கண்டாவளை மற்றும் ஊரியான் பகுதிகளில் வாழும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: