வரட்சியால் இரட்டிப்பாகும் மரக்கறி விலைகள்!

நிலவும் வரட்சியால் மரக்கறி செய்கை பாதிக்கப்பட்டுள்ளமையால் தம்புளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறி வகைகளின் விலை இரட்டிப்பாக அதிகரித்துள்ளது.
வரட்சி காரணமாக கிணற்று நீரை பயன்படுத்தி மரக்கறி செய்கைகளை பாதுகாப்பதற்கு விவசாயிகள் கடும் பிரயத்தனத்தில் ஈடுபட நேரிட்டுள்ளது.
எனினும் ஏற்கனவே பல்வெறு பகுதிகளிலும் மரக்கறி செய்கை அழிவடைந்துள்ளதையும் காணக்கூடியதாக உள்ளது. இந்த நிலையில் சந்தைக்கு கொண்டு வரப்படுகின்ற மரக்கறியின் அளவும் வெகுவாக குறைவடைந்துள்ளது.
இதனால் வழமைக்கு மாறாக மீண்டும் மரக்கறி வகைகளின் விலைகள் அதிகரிக்க தொடங்கியுள்ளதாக வர்த்தகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த நிலை தொடர்ந்தால் பண்டிகை காலத்தில் பாதிப்புக்களை சந்திக்க நேரிடும் எனவும் வர்த்தகர்கள் கூறுகின்றனர்.
Related posts:
வித்தியா கொலை சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு!
எதிர்வரும் மாதம் பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குவதற்கான நேர்முகத்தேர்வு- அமைச்சர் மஹிந்த அமரவீர!
ஏரோஃப்ளோட் விமானம் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டமை ஒரு பாரிய தவறு - ரஷ்யாவிடம் மன்னிப்பு கோரினார் ...
|
|