வரட்சியான காலநிலையால் வடக்கில் மட்டும் 22 ஆயிரத்து 666 குடும்பங்கள் பாதிப்பு – நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் விசேட கோரிக்கை!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2023/08/1500603948_7305260_hirunews_Drought.jpg)
நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
பல மாகாணங்களில் நிலவும் கடும் வறட்சியானது வட பிராந்தியத்தை பாதித்துள்ள நிலையில் வடக்கில் மட்டும் 22 ஆயிரத்து 666 குடும்பங்களைச் சேர்ந்த 72 ஆயிரத்து 357 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குடிநீரைப் பெறமுடியாத மாகாணங்களில் உள்ள மக்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் நீர் ஆதாரங்களோ அல்லது வேறு நீர் உற்பத்தி செய்யும் இடங்களோ இல்லை எனவும் அனர்த்த முகாமைத்துவம் குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறான பிரதேசத்தில் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|