வயிற்று வலியால் பாதிக்கப்பட்டிருந்த சிறுவன் உயிரிழப்பு!

Thursday, June 28th, 2018

இரு நாட்களாக வயிற்று வலி மற்றும் வாந்தியால் பாதிக்கப்பட்ட சிறுவன் ஒருவன் பரிதாபமாக யாழ் போதனா வைத்தியசாலை உயிரிழந்துள்ளார்.

பண்ணாகம் மெய்கண்டான் வித்தியாலயத்தில் தரம் ஒன்றில் கல்வி கற்கும் பத்மநாதன் சபி (வயது 6) என்ற சிறுவனே மேற்படி உயிரிழந்தவராவார்.

குறித்த சிறுவன் கடந்த 24 ஆம் திகதி மதியம் நண்பர்களுடன் விளையாடுவதற்கு சென்றுள்ளான். பின்னர் மாலை 6 மணிக்கு வீட்டுக்கு வந்து வயிறு வலிப்பதாக கூறியுள்ளான். பின்னர் வாந்தி எடுத்துள்ளான். பெற்றோர் சிறுவனை உடனடியாக தனியார் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளான்.

அடுத்த நாள் 25 ஆம் திகதியும் தொடர்ச்சியான வாந்தி எடுத்ததால் சங்கானை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டான். அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டான். அங்கு சிகிச்சை பெற்று வந்த சிறுவன் நேற்று நண்பகல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பான மரண விசாரணையை யாழ் போதனா வைத்தியசாலை மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டிருந்தார்.

Related posts:

வெலிசறை கடற்படை சிப்பாய் ஒருவரால் முல்லைத்தீவில் 71 கடற்படையினர் தனிமைப்படுத்தப்பட்டனர் - முல்லைத்தீ...
சிகிச்சைகளை விரும்பாத சிலரது குறுகிய எண்ணங்களே இலங்கையில் கொரோனா மரணங்கள் அதிகரிக்க காரணம் - வைத்...
இன்று சர்வதேச தொழிலாளர் தினம் - அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களால் பல கூட்டங்கள், பேரணிகள் ம...