வயது குறைந்தவர்களுக்கு சிகரெட் விற்பனை செய்த இரு வர்த்தகர்கள் கைது!

21 வயதுக்குக் குறைந்த சிகரெட் விற்பனை செய்த இரு வர்த்தக நிலைய உரிமையாளர்களை நேற்று முன்தினம் சனிக்கிழமை(02) யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
யாழ்.நகரப் பகுதியிலுள்ள தேநீர்ச் சாலையில் 21 வயதிற்குக் குறைந்த சிறுவர்களுக்குச் சிகரெட் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகத் தொடர்ச்சியான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றிருந்தன. இதனையடுத்து நேற்று முன்தினம் குறித்த இரு விற்பனை நிலையங்களையும் முற்றுகையிட்ட பொலிஸார் சிறுவர்களுக்குச் சிகரெட் விற்பனை செய்யும் போது கையும் மெய்யுமாகப் பிடித்துள்ளனர். கைதான சிறுவர்கள் எச்சரிக்கை செய்து விடுவிக்கப்பட்டனர்.
சிகரெட் விற்பனையில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் இருவருக்கும் எதிராக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Related posts:
தகவலறியும் உரிமை சட்டமூலம் நிறைவேற்றம்!
சட்டவிரோத சுவரொட்டிகளை நீக்க 1,045 பணியாளர்கள் - பொலிஸ் ஊடகப் பேச்சாளர்!
எச்சிலை வீதியில் துப்புவோருக்கு எதிராக கடுமையான சட்டம் - சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொஷான் ராஜபக்ஷ ...
|
|