வன்முறை தொடர்ந்தால் அமைதியான தேசத்தைக் கட்டியெழுப்ப முடியாது – குமார் சங்கக்கார!
Tuesday, May 14th, 2019நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண கூழ்நிலைகளை அடுத்து உருவாகியுள்ள வன்முறைகள் மற்றும் வெறுக்கத்தக்க செயற்பாடுகளினால் நமது நாட்டை நாம் இழக்க நேரிடுமென இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் குமார சங்கக்கார தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அந்தவகையில் பிரிவினைக்கு உட்பட்ட அரசியல் நிகழ்ச்சியில் பங்கேற்காமல் இருப்பது சிறந்ததெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தற்போதைய சூழ்நிலையில் அனைவரும் அமைதியாக இருந்து ஒருவருக்கு ஒருவர் உதவ வேண்டுமெனவும் குமார சங்ககார வலியுறுத்தியுள்ளார். ஆகையால் காயங்களிலிருந்து குணமடைந்து நாம் மீண்டும் எழ வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
ஜனவரி முழுவதும் இரவு வேளைகளில் வெப்ப நிலையில் அதிகரிக்கும் - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்!
21 ஆவது திருத்தம் ஜனாதிபதிக்கு சாதகமாகவே உள்ளது – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு!
நாடாளுமன்ற தேர்தலுக்கான உத்தியே உதிரிகளை இணைக்கும் தமிழ் பொது வேட்பாளர் நகர்வு – ஈ.பி.டி.பியின் ஊடக ...
|
|