வன்முறை சம்பவங்கள் தொடர்பில் ஆராயவுள்ள முன்னாள் படைத்தளபதிகள் அடங்கிய குழுவொன்றை நியமித்தார் கோட்டாபய ராஜபக்ஸ!
Friday, May 27th, 2022மார்ச் 31 ஆம் திகதியில் இருந்து மே 9 ஆம் திகதி வரை இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக முன்னாள் படைத்தளபதிகள் மூவர் அடங்கிய குழுவொன்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நியமித்துள்ளார்.
கடற்படையின் Admiral of the Fleet வசந்த கரன்னாகொட இந்த குழுவிற்கு தலைமை தாங்கவுள்ளார்.
ஜெனரல் தயா ரத்நாயக்க மற்றும் விமானப்படையின் Marshal of the Air Force ரொஷான் குணதிலக்க ஆகியோர் குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் மிரிஹான இல்லத்திற்கு அருகில் இடம்பெற்ற கலவரம் மற்றும் அதன் பின்னர் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து ஆராய இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவங்களுடன் தொடர்புடையோரிடம் இன்றுமுதல் விசாரணைகள் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இரட்டை குடியுரிமை பெற்றுக் கொள்வது எப்படி?
மீதொட்டுமுல்ல குப்பை மேடு சரிவு – சொத்து விபரங்களை மதிப்பிடும் பணிகள் ஆரம்பம்!
பாரிய நிலநடுக்கம் குறித்த ஊகங்களால் அச்சமடைய வேண்டாம் - புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம் தெரிவ...
|
|