வன்முறை, குழப்பங்களை விளைவிப்போர் கைதாவர் – பொலிஸ் திணைக்களம் எச்சரிக்கை!

Wednesday, April 6th, 2022

ஆர்ப்பாட்டம் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகளின் போது வன்முறை மற்றும் குழப்பம் விளைவிக்கும் வகையில் செயற்படும் நபர்கள், குழுக்கள் கைதுசெய்யப்படுவார்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. 

குறித்த அறிக்கையில் – எவருக்கும் அமைதியான முறையில் போராட்டங்களை மேற்கொள்வதற்கு உரிமை உள்ளது. எனினும், குழப்பம் விளைவிக்கும் வகையில் செயற்படுவதற்கு எவருக்கும் அனுமதியில்லை.

அதேபோல், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்கள் கைது செய்யப்படுவார்கள். இது தொடர்பில் உரிய தரப்பினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டிருப்பதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளவர்கள் தீ வைப்பு சம்பவங்கள், அத்துமீறி நுழைதல் போன்ற வன்முறைகளில் ஈடுபடுவதாகவும்  அமைதியின்மையை தோற்றுவிக்கும் வகையில் செயற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஏனையோர் வீடியோ ஊடாக அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்படுவார்கள் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கு எந்தவொரு நபருக்கும் உரிமை உள்ளது எனினும், அமைதியின்மையை தோற்றுவித்து, வன்முறைகளை ஏற்படுத்த முயற்சிப்போர் கைது செய்யப்படுவார்கள்  அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts:

இரணைமடு திட்டத்தை கைவிடும் எண்ணமில்லை: நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவின்  கேள்விக்கு  அமைச்...
சிறுவர் மருத்துவமனை அமைக்க யாழ்ப்பாண நகரில் காணி தேவை – நன்கொடையாக கோருகிறார் போதனா வைத்தியசாலை பணிப...
மின்சாரம் மற்றும் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துங்கள் - அனைத்து அரச நிறுவனங்களிடமும் உள்ளூராட்சி அம...