வன்முறை அதிகரிப்பு – வட மேல் மாகாணத்தில் அனைத்துப் பாடசாலைகளும் மூடப்பட்டன!

Tuesday, May 14th, 2019

வடமேல் மாகாணத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் இன்று (14) மூடப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், நாட்டின் ஏனைய பாடசாலைகள் வழமை போன்று இயங்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடமேல் மாகாணத்தில் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: