வன்முறையை தூண்டும் வகையில் செயற்படுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை!

Thursday, June 15th, 2017

வன்முறையை தூண்டும் வகையிலான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கும், குழுக்கழுக்கும் எதிராக சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றமிழைப்பவரின் சமூக நிலைமை, இனம் மத பின்னணி மற்றும் அரசியல் கட்சி பேதங்கள் என்பன பாராது சட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் அமைச்சரவை வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் குறிப்பிடப்படுகின்றது.

குறித்த தரப்பினருக்கு எதிராக உடன் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளுக்கும் சட்டமா அதிபருக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. மேலும், வணக்கஸ்தலங்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் என்பவற்றை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் வன்முறைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சரவை தெரிவித்துள்ளது. நாட்டை மீண்டும் மோதல் நிலைமைக்கு இட்டுச்செல்லாமல், இதுபோன்ற செயற்பாடுகளுக்கு எதிராக முன்னிற்க வேண்டும் என்றும் அமைச்சரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

Related posts: