வன்முறையை தூண்டியவர்களின் விபரம் விரைவில் வெளியிடப்படும் – சபாநாயகர்!

Friday, March 9th, 2018

நாட்டின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் செயற்பாடுகளின் பின்னணியில் செயற்பட்டவர்கள் தொடர்பான விபரம் விரைவில் வெளியிடப்படும் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

கண்டி வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக பாதுகாப்புத் தரப்பினருடன் கலந்துரையாடி வருவதாகவும் அது தொடர்பான அறிக்கை கிடைத்தவுடன் சபையில் வெளிப்படுத்தப்படுமென உறுதியளித்துள்ளார்.

மேலும் நாட்டின் அமைதியைப் பேணுவதற்கு அரசாங்கம் தீவிரமாக செயற்பட்டு வருகின்றதென்றும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: