வன்முறையைத் தூண்டும் வகையில் கருத்துக்களை அள்ளி வீசி அரசியல் செய்பவர்களுக்குச் சிறைச்சாலை வாழ்க்கைதான் பரிசாகக் கிடைக்கும் – அமைச்சர் டிரான் அலஸ் எச்சரிக்கை எச்சரிக்கை!

Thursday, August 17th, 2023

மக்கள் மத்தியில் வன்முறையைத் தூண்டும் வகையில் கருத்துக்களை அள்ளி வீசி அரசியல் செய்பவர்களுக்குச் சிறைச்சாலை வாழ்க்கைதான் பரிசாகக் கிடைக்கும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டின் சட்டத்தை மீறி அரசியல்வாதி உள்ளிட்ட எவரும் செயற்பட முடியாது. சட்டங்களைச் சவாலுக்குட்படுத்தி எவரும் கருத்துக்களையும் வெளியிட முடியாது. இன வன்முறையை – மத வன்முறையைத் தூண்டும் வகையில் எவரும் செயற்படவும் முடியாது.

சிலர் சட்டத்தை மதிக்காமல் தான்தோன்றித்தனமாகச் செயற்படுகின்றார்கள். அவர்களுக்குச் சிறைச்சாலை வாழ்க்கைதான் பரிசாகக் கிடைக்கும்.” – என்றும் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: