வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் அறிவிக்க மூன்று ஹொட்லைன் எண்கள் அறிமுகம்!

Friday, May 13th, 2022

நாடு முழுவதும் இடம்பெறும் வன்முறை மற்றும் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் சம்பவங்கள் தொடர்பில் பொது மக்கள் அறிவிக்க பாதுகாப்பு அமைச்சு மூன்று ஹொட்லைன் இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

தீ வைப்பு, கொள்ளை, தாக்குதல் மற்றும் பொது அல்லது தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் போன்ற சம்பவங்கள் குறித்து தெரிவிக்குமாறு அமைச்சு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதன்படி, 0767 393 977, 0112 441 146 அல்லது 118 ஆகிய எண்களின் ஊடாக தகவல்களை வழங்க முடியும் என அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts: