வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் மூவர் கோப்பாய் பொலிஸாரால் கைது!

Friday, July 23rd, 2021

கோப்பாய் பொலிஸ் பிரிவில் இன்று அதிகாலை 2 மணி தொடக்கம் காலை 6 மணிவரை முன்னெடுக்கப்பட்ட சிறப்பு சுற்றிவளைப்புத் தேடுதலில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என் பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்களில் மூவர் அண்மைய வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என ஆரம்ப விசாரணைகளில் தெரிய வந்துள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த லியனகேயின் வழிகாட்டலிலும் அவரது பங்கேற்புடனும் மூத்த பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் பங்களிப்புடன் இந்த சிறப்பு சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது 9 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 22, 23 மற்றும் 25 வயதுடைய மூவர் வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ஏனைய 6 பேரும் விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்படுவார்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts: