வன்முறைகளை ஒடுக்க சிறப்பு உந்துருளிப் பிரிவு – அதிரடி நடவடிக்கையில் பொலிஸ்!

Thursday, August 2nd, 2018

யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள வாள்வெட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்துவதற்குச் சிறப்பு உந்துருளிப் பிரிவு களமிறக்கப்பட்டுள்ளது என்று யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது –

யாழ்ப்பாணம், கோப்பாய், மானிப்பாய், சுன்னாகம் ஆகிய பொலிஸ் பிரிவுகளில் சிறப்புச் சுற்றுக்காவல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதற்காகச் சுமார் 10 உந்துருளிகள் அடங்கிய சிறப்புப் பொலிஸ் அணி களமிறக்கப்பட்டுள்ளது.

100 இற்கும் அதிகமான பொலிஸார் சிவில் உடைகளில் களமிறக்கப்பட்டுள்ளனர். ஓரிரு வாரங்களில் குற்றச்சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்படுவார்கள்.

இந்தச் சம்பவங்களைக் கட்டுப்படுத்தப் பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம். வாள்வெட்டுக் கும்பல் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் பொலிஸாருக்கு அவற்றை வழங்குவதன் ஊடாக குற்றச்செயல்களை விரைவாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம்.

Related posts: