வன்னி மாவட்ட தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியிடம் நேரடியாக எடுத்துரைப்பு – ஈ.பி.டி.பியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் தெரிவிப்பு!

Wednesday, December 16th, 2020

பிரதேசங்களின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு அரச அதிகாரிகளும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டுமெனவும் இதன் மூலமே மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை விரைவில் முடிவுக்கு கொண்டு வர வசதியாக இருக்கும் எனவும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (15) மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர்களுடனான சந்திப்பின் போதே அவர் இதனை முன்வைத்துள்ளார்.

இதன்போது வன்னி மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கு. திலீபன் ஜனாதிபதியிடம் நேரடியாக தெரியப்படுத்தியுள்ளார்.

அத்துடன் அதிகாரிகள் செய்த தவறினால் நீண்ட காலமாக மக்கள் வாழும் காணிகளில் இருந்து வனவளத்திணைக்களம் வெளியேறுமாறு கூறுவதால் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.

குறித்த விடயங்களை கவனத்திற்கொண்ட ஜனாதிபதி இவ்வாறான நிலை காணப்படும் பட்சத்தில் அதனை சீர் செய்வது தொடர்பில் உத்தரவாதமளித்துள்ளார் என

இவ்வாறு பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கொண்டு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

பொலிஸ் மற்றும் பொதுமக்களுக்கு இடையிலான உறவை பலப்படுத்தும் பிரஜா பொலிஸ் எண்ணக்கருவை மேம்படுத்தும் நடவ...
சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சைகளை எதிர்கொள்ளும் மாணவர்களுக்காக பல தொழில் பயிற்சி நெறிகள் - கல்...
55 வயதிற்குப் பின்னர் சம்பளம் அல்லது ஓய்வூதியம் கிடைக்காத சிரமம் தொடர்பில் கவனம் - இராஜாங்க அமைச்ச...