வதந்திகளை நம்ப வேண்டாம் – அரச தகவல் திணைக்களம் !

Sunday, April 21st, 2019

கொழும்பு , கடான மற்றும் மட்டக்களப்பு பிரதேசங்களில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் பல்வேறு தரப்பினர் பல்வேறு நோக்கங்ளுக்காக கொண்டு செல்லும் உண்மைக்கு புறம்பான தகவல்களை நம்பி குழப்பமடைய வேண்டாம் என அரச தகவல் திணைக்களம் பொதுமக்களிடம் கோரியுள்ளது.

இது தொடர்பில் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை பொது மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக , அரச தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இந்த அசம்பாவிதம் தொடர்பில் எமது செய்திச் சேவை உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை மாத்திரமே வெளியிட்டு வரும் நிலையில் , சமூக வலைத்தளங்கள் மற்றும் வதந்திகளால் பரவும் உண்மைக்கு புறம்பான தகவல்களை நம்ப வேண்டாம் என பொதுமக்களிடம் கோருகின்றோம்.

Related posts: