வண்ணை வடகிழக்கு பகுதி அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக ஈழமக்கள் ஜனநாயக கட்சி ஆராய்வு!

Friday, January 13th, 2017

ஈழமக்கள் ஜனநாயக கட்சியால் வண்ணை வடகிழக்கு பகுதியில் முன்னெடுக்கப்படவுள்ள செயற்றிட்டங்கள் தொடர்பாக கட்சியின் குறித்த பகுதி நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கூடி ஆராய்ந்துள்ளனர்.

கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் அம்பலம்  இரவிந்திரதாசன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவினால் கடந்த காலங்களிலும் தற்போது முன்னெடுக்கப்பட்ட மற்றும் மேற்கொள்ளப்படவுள்ள செயற்றிட்டங்கள் தொடர்பாக குறித்த வட்டாரத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் மற்றும் ஆதரவாளர்களுடன் ஆராயப்பட்டுள்ளது.

unnamed

இதன்போது குறித்த பகுதியில் வாழும் மக்கள் தமது அடிப்படை தேவைகளான வீட்டுத்திட்டம் மற்றும் வாழ்வாதார உதவிகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுத்தருமாறு இரவிந்திரதாசனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மக்களது கோரிக்கையை செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானநடாவழனது கவனத்திற்கு கொண்டுசென்று தீர்வுகளை பெற்றுத்தருவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக கட்சியின் குறித்த பிரதேச நிர்வாக செயலாளர் இரவீந்திரதாசன் தெரிவித்துள்ளார்.

இதன்போது கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக குழு உறுப்பினர்களான பிரதீபன் மற்றும் தயாழினி ஆகியோரும் உடனிருந்தளர்.

unnamed (2)

Related posts: