வணிகப் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் முயற்சிக்கு பிரித்தானியா பங்களிப்பு – பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவிவிடம் உறுதி!

Saturday, June 5th, 2021

வணிகப் பொருளாதாரம் ஒன்றைக் கட்டியெழுப்புவதற்கு எமது அரசாங்கம் எடுத்துவரும் முயற்சிக்கு பிரித்தானிய அரசாங்கம் வழங்கக்கூடிய பங்களிப்பு தொடர்பாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஶ்ரீமதி சாரா ஹல்டன் அம்மையார் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவுடன் கலந்துரையாடியுள்ளார்.

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஶ்ரீமதி சாரா ஹல்டன் அம்மையார் மற்றும் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச ஆகியோர் நேற்றையதினம் சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தனர்

இதன்போது – 2030ஆம் ஆண்டாகும்போது, இந்நாட்டு வலுசக்தி உற்பத்தியில் 80சத வீதத்தை மீள்பிறப்பாக்க வலுசக்தி மூலம் பெற்றுக்கொள்வதற்கு எமது அரசாங்கம் முன்னெடுக்கின்ற வேலைத்திட்டங்களுக்கு அவசியமான தொழிநுட்ப அறிவைப் பரிமாறிக்கொள்வதற்கும், சூரிய சக்தியை களஞ்சியப்படுத்தல் மற்றும் பரிமாற்றத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கும், சாரா ஹல்டன் அவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவித்தள்ளார்.

அத்துடன் சேதனப் பசளைப் பயன்பாட்டின் மூலம் சுற்றாடலைப் பாதுகாப்பதற்கு நாம் எடுத்த தீர்மானத்தை பிரித்தானிய உயர்ஸ்தானிகர் பாராட்டியுள்ளதாக சுட்டிக்காட்டியிருந்த ஜனாதிபதி  20.8 வீத “வன ஒதுக்கீட்டை” 30 வீதம் வரை உயர்த்துவதற்கு எமது அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அதற்கு அவசியமான அறிவு மற்றும் பொறிமுறைகளைப் வழங்குவதற்கான வழிமுறைகள் குறித்தம்  உயர்ஸ்தானிகர் ஆராய்ந்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும் “எக்ஸ் – பிரஸ் பேர்ள்” கப்பல் மூலம் ஏற்பட்ட பாதிப்பை ஆய்வு செய்வதற்கு, பிரித்தானியாவின் தொழிநுட்ப ஒத்துழைப்பை வழங்குமாறு இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகரிடம் இதன்போது ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை ஜெனிவா முன்மொழிவு தொடர்பான எமது அரசாங்கத்தின் நிலைப்பாட்டையும் தெளிவுபடுத்திய தாக தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச காணிப் பிரச்சினைகளைத் தீர்ப்பது உள்ளிட்ட ஏனைய விடயங்கள் தொடர்பில் எமது அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற வேலைத்திட்டங்களையும் தெளிவுபடுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம் கொரோனா தொற்றைத் தடுப்பதற்கு எமது அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற வேலைத்திட்டங்களைப் பாராட்டிய உயர்ஸ்தானிகர், தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைக்குத் தாம் வழங்கக்கூடிய ஒத்துழைப்பு தொடர்பாகவும் ஜனாதிபதியுடன் ஆராய்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: