வணிகக்கல்வி சார்ந்த நிகழ்வுகளை சகல பாடசாலைகளிலும் நடத்துக!

Sunday, June 17th, 2018

ஜீலை 5 ஆம் திகதி தேசிய வணிக விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு சகல பாடசாலைகளிலும் வணிகக் கல்வி சார்ந்த நிகழ்வுகளை நடத்துமாறு சிரேஷ்ட விரிவுரையாளரும் தேசிய கல்வி நிறுவகத்தின் வணிகத்துறை செயற்றிட்ட தலைவருமான எஸ்.கே. பிரபாகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜீலை 5 ஆம் திகதி தேசிய வணிகக்கல்வி விழிப்புணர்வு தினமாகும். இதனை முன்னிட்டு அப்பாடத்துறை சார்ந்த விழிப்புணர்வுகளை பாடசாலைகளில் நடத்துமாறு வணிகத்துறை பணிப்பாளர்கள், ஆசிரிய சேவைக்கால ஆலோசகர்கள், மற்றும் ஆசிரியர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது தீர்மானிக்கப்பட்டிருந்தது.

வணிகத்துறை பாடமானது வெறுமனே பாடங்களாக மாத்திரம் அமையாது நடைமுறை விடயங்களாகவும் அவை காணப்படுகின்றன. எனவே இவ்விடயத்தையே தொனிப் பொருளாகக் கொண்டு இம்முறை இவ் விழிப்புணர்வு நிகழ்வு முன்னெடுக்கப்படவுள்ளது.

Related posts: