வட மாகாண பொதுச்சேவை மொழிபெயர்ப்பாளர் சேவைக்கான போட்டிப்பரீட்சைத் திகதி அறிவிப்பு!

Tuesday, May 7th, 2019

வடக்கு மாகாணப் பொதுச்சேவைக்கு மாகாண மொழி பெயர்ப்பாளர் தரம் 2 பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சையானது 27.04.2019, 28.04.2019 ஆகிய தினங்களில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எனினும் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலைமைகளைக் கருத்தில் கொண்டு பரீட்சையானது பிற்போடப்பட்டிருந்தது.

எனினும் குறித்த பரீட்சையினை எதிர்வரும் 11, 12.05.2019 திகதிகளில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆயினும் எம்மால் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டிருந்த அனுமதி அட்டையில் காணப்படும் நேர அட்டவணை மற்றும் பரீட்சை நிலையம் என்பன மாற்றமின்றிக் காணப்படும்.

அத்துடன் அனுமதி அட்டையில் குறிப்பிட்டதற்கு அமைவாக 27.04.2019 திகதிக்கு நடைபெறவிருந்த பரீட்சைகள் 11.05.2019ம் திகதி சனிக்கிழமையும் 28.04.2019 நடைபெறவிருந்த பரீட்சைகள் 12.05.2019ம் திகதி ஞயிற்றுக்கிழமையும் நடைபெறும் என்பதனையும் அறியத்தருகிறேன் என்று அதன் செயலாளர் அறிவித்துள்ளார்.

Related posts: