வட மாகாண பிரதி அஞ்சல்மா அதிபர் பதவி நிரப்பப்படாத நிலையில்!

Wednesday, March 7th, 2018

வடக்கு மாகாண பிரதி அஞ்சல்மா அதிபர் பதவிக்கான வெற்றிடம் கடந்த இரு மாத காலமாக நிவர்த்தி செய்யப்படாத நிலையில் காணப்படுகின்றது.

வடக்குமாகாண பிரதி அஞ்சல்மா அதிபராக பணியாற்றிய கே.கனகசுந்தரம் கடந்த ஜனவரி மாதம் 26 ஆம் திகதியுடன் ஓய்வு பெற்றுச் சென்றுள்ளதையடுத்து அவரின் இடத்திற்கு யாரும் நியமிக்கப்படாமல் வெற்றிடமாக காணப்படுவதாக வடக்கு மாகாண பிரதி அஞ்சல்மா அதிபர் அலுவலகம் தெரிவித்தது.

இதேசமயம் வடக்கு மாகாணத்திற்கு புதிய அஞ்சல்மா அதிபர் ஒருவரை நியமிக்கவும் மத்திய தபால் திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. பெரும்பாலும் இம்மாத நடுப்பகுதிக்குள் இப்பதவிக்கு ஒருவர் நியமிக்கப்படுவார்.

Related posts: