வட மாகாண சபை உறுப்பினர் றிப்கான் இராஜினாமா!

Friday, October 6th, 2017

வட மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் தனது மாகாண சபை உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.

சபையின் 107வது அமர்வு இன்று(06) பேரவைச் செயலகத்தில் பேரவைத் தலைவர் சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. இதன்போது தனது உறுப்பினர் பதவியை தான் இராஜினாமா செய்வதாகவும், தன்னுடைய அந்த இடத்திற்கு தங்களது கட்சியில் போட்டியிட்டு வாக்குகளின் அடிப்படையில் அடுத்த நிலையில் உள்ள ஒருவரை நியமிக்க உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இனமத பேதங்களின்றி தான் செயற்பட்டதாகவும், அதே போன்று முதலமைச்சர் உள்ளிட்ட உறுப்பினர்கள் தொடர்ந்து செயற்பட்டு காணிப் பிரச்சனை முதல் அனைத்துப் பிரச்சிசைகளுக்கும் சுமூகமான தீர்வை ஏற்படுத்த வேண்டுமென்றும் இதன் போது றிப்கான் பதியூதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இவர் கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இனது சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.