வட மாகாண குடிநீர் பிரச்சினையை தீர்க்க உதவுகின்றது நெதர்லாந்து!

Friday, June 1st, 2018

யாழ். மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட நெதர்லாந்து தூதுவர் எச்.இ.டோர்வார்ட் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயை வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்று (31-05-2018) சந்தித்து கலந்துரையாடிபோது நெதர்லாந்து அரசாங்கம் வடமாகாண அபிவிருத்திக்கும், யாழ்ப்பாணத்தில் நிலவும் தண்ணீர்ப் பிரச்சினையை நிவர்த்தி செய்வதற்கும் உதவிசெய்ய உறுதியளித்துள்ளதாக வட மாகாண ஆளுநர் ரெஜிலோட் குரே தெரிவித்துள்ளார்.

நெதர்லாந்து அரசாங்கம் யாழ்ப்பாண ஒல்லாந்தர் கோட்டையை பாதுகாப்பதற்கும், வடமாகான அபிவிருத்திக்கும் உதவுவது தொடர்பாக ஒல்லாந்து தூதுவர் தன்னுடன் கலந்துரையாடியதாக தெரிவித்த ஆளுநர் ரெஜினோலட் குரே இரணைமடுவில் இருந்து தண்ணீரை யாழ்ப்பாணத்துக்கு கொண்டுவருவதற்கு எவ்வளவு காலம் எடுக்கும், எவ்வளவு நிதி தேவை என்பது தொடர்பாகவும், வடமாகாண பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்துவது பற்றியும் இரு தரப்பினரும் ஆராய்ந்ததோடு எமது நாட்டின் அபிவிருத்திக்கும், இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்புக்கள், கல்வியில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வது பற்றியும்  கலந்துரையாடப்பட்டதாக தெரிவித்தார்.

Related posts: