வட மாகாண ஆளுநரின் இணைப்பாளராக ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் கணேசநாதன் நியமனம்!

Wednesday, November 24th, 2021

வடக்கு மாகாணத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட ஆளுநர் ஜீவன் தியாகராஜாவின், பொது உறவுகள் தொடர்பிலான இணைப்பாளராக ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ரி. கணேசநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

வட மாகாணத்தின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சராக கடமையாற்றிய அவர், வட மாகாணத்தில் பொது மக்களுடன் நெருங்கிய உறவினை கொண்டுள்ள நிலையிலும், மக்களின் பிரச்சினைகளை மிக நன்கு அறிந்துள்ள நிலையிலும் இவ்வாறு ஆளுநரின் பொது மக்கள் உறவுகள் தொடர்பிலான் இணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதம் ஆளுநர் ஊடாக வழங்கப்பட்டுள்ளது.

பொலிஸ் தலைமையகத்தின் குற்றத் தடுப்புப் பிரிவு, போக்குவரத்து தலைமையகம் உள்ளிட்ட பொலிஸ் திணைக்களத்தின் முக்கிய பிரிவுகளின் பனிப்பாளராக கடமையாற்றிய அனுபவமிக்க ரி.கணேசநாதன், இறுதியாக வட மாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சராக கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


வாகனங்களை இறக்குமதி செய்வது குறித்து எந்த முடிவும் எட்டப்படவில்லை - அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவிப...
அதிர்ஷ்ட இலாபச் சீட்டு விற்பனைப் பணிகளில் இருந்து விலகுமாறு அகில இலங்கை லொத்தர் விற்பனை முகவர்கள் சங...
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னணியில் அயல் நாடு - முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாக்கும...