வட மாகாண அமைச்சுகளின் செயலாளர்களுக்கு இடமாற்றம்!

Thursday, January 20th, 2022

இன்று (20) முதல் அமுலாகும் வகையில் வட மாகாண அமைச்சுகளின் செயலாளர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவினால் நிர்வாக மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோவன், மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் வரதீஸ்வரன், மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக மாற்றம் பெற்றுள்ளார்.

வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் செந்தில்நந்தனன், பேரவைச் செயலக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வட மாகாண ஆளுநரின் செயலாளர், சரஸ்வதி மோகனநாதன் சுகாதார அமைச்சின் செயலாளராக நியமனம் பெற்றுள்ளார்.

வடமாகாண பேரவைச் செயலகத்தின் செயலாளர் குகநாதன், பிரதிப் பிரதம செயலாளர், பொது நிர்வாகத்துக்கு மாற்றம் பெற்றுள்ளார்.

இதேவேளை, வடமாகாண ஆளுநரின் செயலாளரின் இடத்துக்கு எவருமே நியமிக்கப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: