வட மத்திய மாகாண அமைச்சர் இராஜினாமா?

வட மத்திய மாகாண சபை போக்குவரத்து, விளையாட்டு, வர்த்தகம், கைத்தொழில் அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சுப் பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக எஸ்.எம் ரஞ்சித் அறிவித்துள்ளார்.
வட மத்திய மாகாண சபையின் சுகாதாரம், சுதேச மருத்துவத்துறை, சமூகநலம் மற்றும் மாகாண அலுவல்கள் அமைச்சர் கே.எச். நந்தசேன அவரது அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முனமாகவே இராஜினாமா செய்வதாக எஸ்.எம் ரஞ்சித் அறிவித்துள்ளார்.
வட மத்திய மாகாண சபையின் அமைச்சுப் பதவியில் இருந்து எஸ்.எம் ரஞ்சித் நீக்கப்பட்டு அந்த இடத்திற்கு வட மத்திய மாகாண சபையின் உறுப்பினர் ஹேரத் பண்டா நியமிக்கப்பட்டுள்ளதாக இன்று காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கே.எச். நந்தசேன கூறியிரந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சைட்டம் பிரச்சினைக்குத் தீர்வுக்கு பொதுமக்கள் ஆணைக்குழு!
வடக்கில் 44 ஆயிரம் மெற்றிக்தொன் நெல் கொள்வனவு!
17 ஆயிரம் பேருந்து உரிமையாளர்களுக்கான நிவாரணங்களை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கை ஆரம்பம் - இராஜாங்க அ...
|
|