வட பிராந்திய கடற்படை எல்லைக்குள் 5 மாதத்தில் 1008 கிலோ கேரள கஞ்சா பறிமுதல் !

Tuesday, June 25th, 2019

கடந்த 5 மாத காலப் பகுதிக்குள்ள வட பிராந்திய கடற்படை எல்லைக்குள் 1008 கிலோ கிராம் கேரள கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் 24 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜராக்கப்பட்ட நிலையில், தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வட பிராந்திய கடற்படைகளின் தலைமை அதிகாரி டில்வா டி சந்தனசேன தெரிவித்தார்.

இவ் கடல்வழி மார்க்கமாக அத்துமீறி போதை பொருளாக வந்த கஞ்சா பருத்தித்துறை மற்றும் காங்கேசன்துறை, வெற்றிலைக்கேணி ஆகிய பெரும் கடல் நிலப்பரப்பில் வைத்தே கைப்பெற்றப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

போதை தடுப்பு தொடர்பான ஜனாதிபதி செயலனியின் ஏற்பாட்டில் போதையற்ற நாட்டினை உருவாக்குவோம் வருங்கால இளைய சமுதாயத்தினை பாதுகாப்போம் என்னும் கருப்பொருளில் தேசிய வாரத்தினை முன்னிட்டு ஆரம்பிக்கப்பட்ட சமூக மட்ட சிவில் அமைப்புகள், அரச அதிகாரிகள், ஆகியோர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் நிகழ்வு  யாழ். மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது.

இதன் போது யாழ். மாவட்டத்தில் 15 பிரதேசசெயலாளர்கள் ரீதியாக கிராம மற்றும் நகர மட்டத்தில் இளைஞர்கள் மட்டத்தில் போதை பொருள் பாவனைகளின் நிலைமைகள் மற்றும் பாதிக்கப்பட்ட அவ்வாறான குடும்பங்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள், அவர்களின் அடிப்படைப் பிரச்சினைக்கான காரணங்கள், சமூக கிராம மட்ட, பிரதேச செயலகத்தின் ஒத்துழைப்புகள் போன்ற பல்வேறு தேவைப்பாடுகள் குறித்தும் இங்கு விரிவாக ஆராயப்பட்டது. இதன் போது கருத்து தெரிவித்த, வட பிராந்திய கடற்படைகளின் தலைமை அதிகாரி டில்வா டி சந்தனசேன, சுன்னாக பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் மேற்கொண்ட தேடுதலின் போது கடல்வழி மார்க்கமாக கஞ்சா கடத்தும் சந்தேக நபர்களிடம் இருந்து கிடைத்த தகவலை அடுத்து முன்னேடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் கசிப்பு உற்பத்தியில் மேற்கொண்ட 36 பேரும், கஞ்சாவினை வைத்திருந்த குற்றச்சாட்டில் 11 பேரும், ஹெரோயின் போதை பொருளுக்காக 6 பேரும் கைது செய்துள்ளோம். அவர் சுன்னாகம் பொலிஸ் நிலைத்துடன் அனுப்பட்டு மல்லாக நீதிமன்றத்தின் ஊடாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்

Related posts:


மே தினத்தன்று அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் பயணிகள் பஸ்களுக்கு கட்டணம் அறவிடப்படமாட்டாது!
அனைத்து அரச ஊழியர்களையும் இன்றுமுதல் பணிக்கு அழைப்பதற்கு நடவடிக்கை - பொது நிர்வாக அமைச்சு அறிவிப்பு...
யாழ் மாநகர முதல்வரின் பிரத்தியேக ஆளணிக்கு ஆப்பு வைத்த சபை உறுப்பினர்கள் – குழப்பத்தில் ஆர்னோல்ட்!