வட பகுதிக்கான பொருளாதாரக் கொள்கை ஒன்று வகுக்கப்பட வேண்டும் – ஈ.பி.டி.பியின் வேட்பாளர் விக்னேஷ் குலரட்ணம் தெரிவிப்பு!

Tuesday, July 7th, 2020

யாழ்ப்பாணம் வர்த்தகர்களளின் பிரச்சனைகள் மற்றும் எதிர்கால அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்  யாழ்ப்பாணம் கிளிநொச்சி தேர்தல் மாவட்ட வேட்பாளரான விக்னேஸ் குலரட்ணம் தலைமையில் ஆராயப்பட்டது.

ரில்கோ விடுதியில்  நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில்  யாழ்; மாவட்ட வர்த்தகர்கள் எதிர்கொள்ளும்  பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன் அது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது கவனதத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது.

 குறித்த கலந்துரையாடலில் உரையாற்றிய வேட்பாளர் விக்னேஷ் குலரட்ணம் கூறுகையில் – வட பகுதிக்கான பொருளாதாரக் கொள்கை ஒன்று வகுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் வடக்கிற்கு என்ற ஒரு தனியான குறித்த பொருளாதாரக் கொள்கையின் முக்கியத்துவம் உணரப்படாமல் உள்ளமை மிக வருத்தத்திற்குரிய விடயம் என தெரிவித்த அவர் இதன்காரணமாகவே வர்த்தகரது நலன்களை முன்னிறுத்தி நான் பொதுத்தேர்தலில் களம் இறங்கியுள்ளேன் எனவும் அவர்  மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: