வட கொரிய தூதுவருக்கான ஆவண சான்றிதழ்களைக் கையளித்தார் கருணாசேன கொடித்துவக்கு!

Saturday, September 17th, 2016

வடகொரியாவுக்கான இலங்கை தூதுவர் கலாநிதி கருணாசேன கொடித்துவக்கு, தனது நியமன ஆவண சான்றிதழை வட கொரிய அதியுயர் மக்கள் பேரவையின் தலைவரான Kin Young Namவிடம் கையளித்துள்ளார்.

இந்த சான்றிதழ்களை வட கொரியாவின் தலைநகரான Pyongyang இல் உள்ள Mansadae Assembly மண்டபத்தில் வைத்து கையளித்துள்ளார். இதன் போது, இலங்கை மற்றும் வட கொரியாவிற்கு இடையிலான இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

வடகொரியா சென்றிருந்த கருணாசேன கொடித்துவக்கு,அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் Ri Yong Ho மற்றும் கல்வி மற்றும் கலாச்சார துறைகளை சேர்ந்த சிரேஸ்ட அதிகாரிகளையும் சந்தித்துள்ளார். கருணாசேன கொடித்துவக்கு சீனாவுக்குமான இலங்கையின் தூதுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

1111111

Related posts: