வட் வரி நீக்கப்படுகின்றமை குறித்து மருத்துவ சங்கங்கள் பாராட்டு!

Thursday, June 21st, 2018

தனியார் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறும் நோயாளர்களிடமிருந்து அறவிடப்படும் வட் வரியை ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் நீக்க எடுத்துள்ள நடவடிக்கை குறித்து மகிழ்ச்சி அடைவதாக மருத்துவ நிபுணர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
அத்துடன் சுயாதீன மருத்துவ நிபுணர்கள் சங்கம், பல்கலைக்கழக மருத்துவ நிபுணர்கள் சங்கம், அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் என்பனவும் இதற்கு பாராட்டு தெரிவித்துள்ளன. சுகாதார சேவையை மேலும் ஊக்குவிக்க இது உதவும்.
இதேவேளை நாட்டின் மொத்த சனத்தொகையில் 45 சதவீதமானோர் தனியார் மருத்துவ சேவையை நாடுகிறார்கள்.

Related posts: