வட்டுக்கோட்டை பகுதியில் வீடொன்றில் வயோதிபப் பெண்கள் இருவரின் சடலங்கள் மீட்பு!

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் உள்ள வீடொன்றில் வயோதிபப் பெண்கள் இருவரின் சடலங்கள் கண்டறியப்பட்டன.
மாவடி, சங்கரத்தை என்ற இடத்தில் உள்ள வீடொன்றில் இவ்வாறு சடலங்கள் கண்டறியப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர்.
76 வயதுடைய ஒருவரும் மற்றையவர் 73 வயதுடையவர் என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர். ஒருவர் இரண்டு வாரங்களுக்கு முன்பாகவும் உயிரிழந்துள்ளார். மற்றையவர் இரண்டு நாள்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இருவர் மட்டுமே அந்த வீட்டில் வசித்து வந்த நிலையில் அவர்களுக்கு உதவி இல்லை என்று விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டது.
மாதாந்த உதவிப் பணம் பெற்றுக்கொள்ளவில்லை என்று கிராம அலுவலகர் வீடு தேடிச் சென்ற போதே இருவரும் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
000
Related posts:
இலங்கையில் புதிய பழ வகை அறிமுகம்!
8 ஆயிரம் மாணவர்கள் இம்முறை கல்வியியல் கல்லூரிகளுக்கு !
பசறை விபத்து தொடர்பில் பொலிஸ் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையும் பொறுப்பு கூறவேண்டும் - பேருந்து...
|
|