வட்டுக்கோட்டையில் 19 வயது யுவதியைக் காணவில்லை என முறைப்பாடு!

Thursday, May 19th, 2016

வட்டுக் கோட்டை காளி கோவில் பகுதியைச் சேர்ந்த 19 வயது யுவதியைக் காணவில்லை என அவரது பெற்றோரால் வட்டுக் கோட்டைப் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை குறித்த யுவதி காணாமற் போயுள்ள நிலையில் அவரைத் தேடியும் காணாமையால் பெற்றோர்களால் மறுநாள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர் . இது தொடர்பாக் வழக்குப் பதிவு செய்துள்ள வட்டுக் கோட்டைப் பொலிஸ் நிலைய சிறு குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts: