வட்டுக்கோட்டையில் அஜித் குழு உறுப்பினர் ஒருவர் கைது!

Thursday, December 7th, 2017

 “அஜித்” குழுவின் உறுப்பினர் ஒருவர் வட்டுக்கோட்டையில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அண்மையில் மீசாலை பகுதியில் வாள்வீச்சு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அதில் அறிமுகமாகியதுதான் இந்த அஜித் குழு.

இதன்படி சந்தேகநபரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படயில் சில நாள்களாக பொலிஸார் மேற்கொண்ட தேடுதலின்போது சில அஜித் குழு உறுப்பினர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

இதனடிப்படையில் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு இன்றையதினம் கிடைத்த இரகசிய தகவலை அடுத்து இரு உறுப்பினர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் பல ஆயுதங்களும் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது

Related posts: