வடலியடைப்பு கலைவாணி முன்பள்ளிக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியினரால் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு!

Thursday, December 8th, 2016

ஈழமக்கள் ஜனநாயக கட்சியினால் வடலியடைப்பு கலைவாணி முன்பள்ளி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் மானிப்பாய் பிரதேச நிர்வாக செயலாளர் வெலிச்சோர் அன்ரன் ஜோண்சனிடம் (ஜீவா) குறித்த முன்பள்ளி நிர்வாகத்தினர் விடுத்திருந்த வேண்டுகோளுக்கிணங்க கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கிட்டின் மூலம் குறித்த முன்பள்ளிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

நேற்றையதினம் குறித்த முன்பள்ளி மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் அதிதியாக கலந்தகொண்ட ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாகச் செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன் (வி.கே.ஜெகன்) அவர்களால் முன்பள்ளி மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் கட்சியின் மானிப்பாய் பிரதேச உதவி அமைப்பாளர் குலம் வட்டாரச் செயலாளர் ரவி ஆகியோரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

image-0-02-06-f34635886280d6e5a11a8204485b91241785a953da5294cd21a3f141909ba843-V

image-0-02-06-1214711636c9567b364f55cfe808e0fb88d9e65e65ed88664b0133b4024ee35a-V

image-0-02-06-89074db339cd61a485e43125a9742a0bc7d5fb71762cec5ce0e3814983f72fac-V

image-0-02-06-bdc82673beb4375dad3e06f8dc4243f06c6064bae92fadf2a0354c7a81e2dc57-V

Related posts: