வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளின் கவனத்திற்கு…..

Friday, April 14th, 2017

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் நிரந்தர  அரசாங்க வேலைவாய்ப்புப் பெற்றுத் தரக் கோரிக் கடந்த பெப்ரவரி மாதம்-27 ஆம் திகதி யாழ் . மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக ஆரம்பித்த காலவரையற்ற போராட்டம் இன்று வியாழக்கிழமை(13) 46 ஆவது நாளாகவும் தீர்வின்றித் தொடர்ந்தது.

யாழ்.குடாநாட்டிற்கு நாளை மறுதினம் சனிக்கிழமை(15) ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேனவின் செயலாளர் விஜயம் மேற்கொள்ளவுள்ளவுள்ளார்.

யாழ். வருகை தரும் அவர்  இந்த மாத இறுதிக்குள் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குவது தொடர்பாக வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.

ஆகவே, குறித்த கலந்துரையாடலில் பங்கேற்கும் முகமாக வடமாகாணத்திலுள்ள அனைத்து வேலையற்ற பட்டதாரிகளையும் நாளை மறுதினம் முற்பகல்-10 மணிக்கு முன்னதாக யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக ஒன்று கூடுமாறு வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகம் கேட்டுள்ளது.

Related posts: