வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தினரின் ஒன்றுகூடல் நிகழ்வு !

Sunday, July 3rd, 2016

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தினரின் ஒன்றுகூடல் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (03) காலை 10.30 மணிக்கு நல்லூர் ஆலய முன்றலில் நடைபெறவுள்ளது.

வடமாகாணக் கல்வியமைச்சின் செயலாளரினால் அறிவிக்கப்பட்ட 1000 பட்டதாரிகளை வடமாகாணப் பாடசாலைகளிலுள்ள ஆசிரிய வெற்றிடங்களுக்கு நியமிப்பது தொடர்பான அறிவிப்பு, நாடாளாவியரீதியில் க.பொ.த உயர்தரச் சித்தித் தகுதியுடைய 23 ஆயிரம் பேரை ஆசிரியர்களாகப் பாடசாலைகளுக்கு உள்ளீர்ப்பது தொடர்பான மத்திய அரசின் அறிவிப்பு, தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப அதிகாரிகளாக 8000 பட்டதாரிகளை இணைத்துக் கொள்வது தொடர்பான மத்திய அரசின் அறிவிப்பு என்பன தொடர்பாகவும் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தின் நிர்வாகக் கட்டமைப்பைப் பலப்படுத்துதல் மற்றும் எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்படவுள்ளன.

எனவே, பல்கலைக்கழக உள்வாரி, வெளிவாரிப் பட்டதாரிகள், தேசிய உயர் தொழில் நுட்பக் கல்லூரிப் பட்டதாரிகள் அனைவரையும் தவறாது  கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தல் விடுக்கபட்டுள்ளது.

Related posts: