வடமாகாண முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜெயசிங்கவுக்கு பிணை!

புங்குடுதீவு மாணவி வித்யா வழக்கின் பிரதான சந்தேக நபரான சுவிஸ் குமாரை தப்பிக்க வைத்தமை தொடர்பான வழக்கில் சந்தேக நபரான முன்னாள் வடமாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜெயசிங்க இன்று ஊர்காவற்துறை நீதிமன்றினால் கடும் நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
குறித்த வழக்கு இன்று யாழ் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நீதவான் நீதவான் எம்.எம்.றியால் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன் இவ்வழக்கின் சந்தேக நபரான முன்னாள் வடமாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜெயசிங்க மன்றில் ஆஜர் படுத்தப்பட்டார்
சந்தேகநபர்நார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் பிணைக்கோரிக்கையினை முன்வைத்தனர்இதற்கு வழக்கு தொடுனர் தரப்பில் ஆஜனான அரச சட்டவாதி நிசாந்தன் தமது ஆட்சேபனையை தெரிவித்தார்எனினும் ஆட்சேபனைக்கான காரணங்களில் மன்று திருப்தியடைதாத காரணத்தினால் குறித்த சந்தேகநபரான முன்னாள் வடமாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜெயசிங்கவை மூன்று லட்சம் ரூபா காசு மற்றும் ஐந்து லட்சம்ரூபா பெறுமதியான நான்கு சரீரப்பிணையுடன் பிணையில் செல்ல நீதவான் உத்தரவிட்டார்வழக்கு இடம்பெறும் சந்தரப்பத்தில் சந்தேகநபர் வெளிநாட்டிற்கு செல்லத்தடை விதிக்கப்பட்டதுடன் அவரது கடச்சீட்டையும் நீதிமன்றில் ஒப்படைக்க கட்டளையிடப்பட்டுள்ளது
மேலும் குடிவரவு குடியகல்வு திண்ணைக்கள அதிகாரிகளுக்கு சந்தேநபர் தொடர்பில் நீதிமன்ற பதிவாளரினால் அறிவிக்க கட்டளையிடப்பட்டுள்ளதுடன் ஒவ்வொரு மாதமும் முதல் திங்கட்கிழமைகளில் கொழும்பிலுள்ள குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் சமூகமளித்து கையொப்பொம் இடுமாறும் நீதிமன்று கட்டளையிட்டுள்ளது.
மேலும் இவ்வழக்கை வரும் டிசம்பர்மாதம் ஐந்தாம் திகதிக்கு நீதவான் ஒத்திவைத்தார்
Related posts:
யாழ்ப்பாணத்தில் காந்தி ஜெயந்தி தினமும் சர்வதேச அகிம்சை தினமும் அனுஷ்டிப்பு!
நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்களுக்கிடையிலான விசேட கூட்டம் அடுத்த வாரம்!
சீரற்ற காலநிலை - நாட்டு மக்களுக்கு விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் கடும் எச்சரிக்கை!
|
|