வடமாகாண மீன் உற்பத்தி திட்டத்திற்கு நியூசிலாந்து உதவி!

Wednesday, March 28th, 2018

மன்னார் மற்றும் வடமாகாணத்தில் மீன் உற்பத்தி அபிவிருத்தியை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்படும் திட்டங்களுக்கு நியூசிலாந்து உதவிகள் வழங்க முன்வந்துள்ளது.

இலங்கையில் கடற்றொழில் துறை திட்டங்களில் நியூசிலாந்து நாட்டு முதலீட்டாளர்கள் முதலீடுகளை மேற்கொள்வதற்கு ஊக்குவிக்கப்படுவார்கள் என்று நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர்மகிந்த அமரவீரவிற்கும் உயர்ஸ்தானிகருக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகள் ஜோனா ஹம்பக்கர் (Joanna Kempker) தெரிவித்துள்ளார்.

குறித்த பேச்சுவார்த்தை நீரியல்வள அமைச்சில் நடைபெற்றது. கடற்றொழில் முகாமைத்துவத்தில் நியூசிலாந்து முன்னிலையில் உள்ளது. இத்துறையில் தனது அனுபவங்களை இலங்கையுடன்பரிமாறிக்கொள்வதுடன் காத்திரமான கடற்றொழில் அபிவிருத்திக்கு உதவுவதாகவும் நியூசிலாந்து தூதுவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கடற்றொழில் முகாமைத்துவத்தில் இலங்கை அதிகாரிகளுக்கும் அத்துறையை சார்ந்தோர்களுக்கும் பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளது.

Related posts: