வடமாகாண தொண்டராசிரியர்களுக்கு மாத இறுதிக்குள் நியமனம்: ஆளுநர் றெஜினோல்ட் குரே!

Wednesday, February 1st, 2017

வடமாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கான நிரந்தர நியமனம் பெப்ரவரி மாத இறுதிக்குள் வழங்கப்படும் என வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே உறுதி அளித்துள்ளார்.

வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்று பிற்பகல் வடமாகாண தொண்டர் ஆசிரியர் பிரதிநிதிகளைச் சந்தித்த வடமாகாண ஆளுநர் மேற்படி உறுதிமொழியினை வழங்கியுள்ளார்.

இந்த சந்திப்பின் போது அமைச்சரவை அனுமதிப்பத்திரம் நிரந்தர ஆசிரியர் நியமனம் வழங்கப்படுவதற்கு என நேர்முகத் தேர்வு மூலம் தெரிவு செய்யப்பட்ட தொண்டர் ஆசிரியர்களின் பெயர் விபரங்கள் என்பனவற்றையும் வடமாகாண தொண்டர் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளிடம் வழங்கியுள்ளார்.

இதேவேளை வடமாகாண தொண்டர் ஆசிரியர்களின் நிரந்தர நியமனம் தொடர்பான விசேட கூட்டமொன்று கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்திற்கு முன்னால் உள்ள தனியார் கல்வி நிலையத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை(03) நடைபெற உள்ளதாக வடமாகாண தொண்டர் ஆசிரியர்களின் சங்கத் தலைவர் இ.ஜெயராஜ் அறிவித்துள்ளார்.

மேலும்இ இக்கூட்டத்தில் நியமனம் வழங்கப்படும் தொண்டர் ஆசிரியர்களின் பெயர் மற்றும் விபரம் அறிவிக்கப்படும் என வடமாகாண தொண்டர் ஆசிரியர் சங்கத் தலைவர் தெரிவித்ததுடன் 0776380629 என்ற தனது தொலைபேசி இலக்கத்துடன் தொண்டர் ஆசிரியர்களை தொடர்பு கொள்ளுமாறும் அறிவித்துள்ளார்.

kura_0

Related posts: