வடமாகாண சபையில் இடம்பெற்ற பாரிய நிதி மோசடியான நெல்சிப் ஊழல் அறிக்கை எதிர்வரும்-24 ஆம் திகதி வெளியாகிறது!

Wednesday, November 16th, 2016

வடமாகாண சபையில் இடம்பெற்ற பாரிய நிதி மோசடியான நெல்சிப் ஊழல் அறிக்கை எதிர்வரும் 24.11.2016 அன்று நடைபெறவுள்ள வடமாகாண சபையின் 66 ஆவது அமர்வின் போது சமர்பிக்கப்படவுள்ளதாக வடமாகாண சபையின் அவைத்தலைவர் சிவஞானம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று புதன்கிழமை(16) கருத்துத் தெரிவிக்கையில்,

நெல்சிப் ஊழல் தொடர்பில் வடமாகாண சபையில் மூவரடங்கிய குழுவொன்று கடந்த-2015 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நியமிக்கப்பட்டது.  இந்நிலையில் நெல்சிப் ஊழல் தொடர்பில் வடமாகாணப் பிரதம செயலாளரால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவும் தனது அறிக்கையினை வடமாகாண ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளது.

வடமாகாண சபையால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவின் அறிக்கை கிடைக்கப்பெற்று ஒருவருடம் கடந்தும் சபைக்கு சமர்ப்பிக்கப்படாதிருந்தது. இந்நிலையில் மாகாண சபை உறுப்பினர்களது அழுத்தங்களையடுத்து சுமார் ஒரு வருட இடைவெளியின் பின்னர் குறித்து அறிக்கை சமர்பிக்கப்படவுள்ளது.

இந்த ஊழல் குற்றச்சாட்டுக்களில் இலக்கு வைக்கப்பட்டுள்ள முன்னாள் வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் நாட்டை விட்டு சென்றுள்ள நிலையில் தற்போது இந்த அறிக்கை வெளியிடப்படவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

northern-provincial-council

Related posts: