வடமாகாண ஆளுநரின் வாராந்த மக்கள் சந்திப்பு நடைபெறாது 

Wednesday, September 13th, 2017
 
யாழ். சுண்டுக்குளியிலுள்ள வடமாகாண ஆளுநர் பணிமணையில் வாரம்தோறும் புதன்கிழமைகளில் வடமாகாண ஆளுநர்  ரெஜினோல்ட் கூரே நடாத்திவரும் மக்கள் சந்திப்பு இன்று புதன்கிழமை (13) இடம்பெற மாட்டாதென ஆளுநரின் பிரத்தியேகச் செயலாளர் ஜே.எம்.சோமசிறி தெரிவித்துள்ளார்.
 வாரம் தோறும் புதன்கிழமைகளில் சுண்டுக்குளியிலுள்ள ஆளுநர் பணிமனையில் வடமாகாண ஆளுநர் மக்களைச் சந்தித்து அவர்களது தேவைகளைக் கேட்டறிந்து வருகிறார்.
இந்த நிலையில் தவிர்க்க முடியாத காரணங்களினால் நாளைய தினம் மக்கள் சந்திப்பு இடம்பெற மாட்டாது எனவும், எதிர்வரும்-20 ஆம் திகதி புதன்கிழமை வழமைபோன்று மக்கள் சந்திப்பு இடம்பெறுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: