வடமாகாணப் பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் லீவு விண்ணப்பங்களுக்கு அனுமதி

வட மாகாணப் பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் சகல பொலிஸ் உத்தியோகத்தர்களின் விடுப்புக்களும் கடந்த பல நாட்களாக இடைநிறுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை(01) முதல் பொலிஸாரின் விடுப்பு(லீவு) விண்ணப்பங்களுக்கு அனுமதிக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணச் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரொஷான் பெனான்டோ இதற்கான அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.
இதற்கான அறிவுறுத்தல் கடிதம் வட மாகாணத்திலுள்ள சகல பொலிஸ் நிலையங்களுக்கும் இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, யாழ். மாவட்டத்தில் அதிகரித்து வரும் வாள்வெட்டுக்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் கடமையாற்றும் பொலிஸாரின் விடுமுறைகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
உலகத்துடனான எங்கள் கூட்டணிகளை மீண்டும் சரிசெய்வோம் - பதவியேற்றதும் உலக நாடுகளுக்கு பைடன் விடுத்துள்ள...
அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரிப்பு!
அனைத்து பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் காலை உணவு வழங்க நடவடிக்கை - மகளிர் மற்றும் சிறுவர் விவகார இர...
|
|